இதுவரை 273 கொரோனா மரணங்கள் பதிவு
Related Articles
நாட்டில் நேற்றைய தினத்தில் மேலும் மூன்று மரணங்கள் பதிவானதையடுத்து இதுவரை 273 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினத்தில் ஏற்பட்ட மூன்று மரணங்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குகின்றர். இந்நிலையில் 669 புதிய தொற்றாளர்கள் நேற்றைய தினத்தில் மாத்திரம் இனங்காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளதென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்த்ர சில்வா குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 93வது இடத்தில் காணப்படுகின்றது.
நேற்றைய தினத்தில் 774 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும், அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களில், 46 ஆயிரத்து 594 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 7 ஆயிரத்து 552 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 806 பேர் தொற்று ஏற்கட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியம் மேலும் தெரிவித்துள்ளது.