கொரோனா வைரஸ் தொற்றுடைய நோயாளி ஒருவர் புனாணை சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில் அவர் தற்போது பிடிக்கப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 43 வயதான ஆண் நோயாளர் ஒருவர் நேற்றைய தினம் புனாணை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் இன்றைய தினம் எஹெலியகொட பலபிட்டிய பகுதயில் வைத்து அடைளாயம் காணப்பட்டு அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளாhக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் கொலன்னாவ மீதொடமுல்ல விகாரை மாவத்தையில் பேக்கரி ஒன்றில் பணியாற்றிய நிலையிலேயே கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தார். அதனையடுத்தே புனாணை கொரோனா சிகிச்சை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/g1amTrUfdx8″]