தேசிய மக்கள் சக்தி நாட்டிற்காக மாத்திரமே அரசியல் செய்வதாக அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் மாற்றுவழியொன்றை மக்களுக்கு நாம் முன்வைத்தோம். தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாம் வீழ்ந்து விட்டதாக ஒரு சிலர் எண்ணினர். தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னரே பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு வருடம் செல்வதற்குள் வாக்களித்தவர்கள் வெற்றிபெற்றதாக நினைத்தவர்கள் பாற்சோறு சாப்பிட்டவர்கள் தோல்;வியடைந்துள்ளனர். இவ்வாறு நடக்கும் என்பதை உணர்ந்து மாற்று வழியொன்றை முன்வைத்த தேசிய மக்கள் சக்தியான நாங்கள் தோல்வியடையாதவர்களாக காணப்படுகின்றனர். அரசியலை நோக்கினால் நாட்டிற்கு சரியான பாதையொன்றை காண்பிக்க கூடிய ஒரேயொரு சக்தியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. எமக்கு எமது நாட்டை வழிநடாத்த அறிவிலும் கொள்கையிலும் குறைகள் கிடையாது. கொள்கை அடிப்படையில் அமைந்த வேலைத்திட்டங்களும் உண்டு. நாட்டைக் கட்டியெழுப்பக்;கூடிய கொள்கைகளை வகுப்பதாயின் அதனை செயற்படுத்துவதற்குரிய இடதுசாரி அறிவும் காணப்பட வேண்டும்.