காட்டு யானை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் உத்தேச காட்டு யானை முகாமைத்துவ பிரதேசத்தை வெளியிடும் நடவடிக்கை நிச்சயம் இடம்பெறுமென அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் இரு மாத காலப்பகுதிக்குள் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
“அநுராதபுரத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் காணப்படுகின்ற யானை சம்பந்தமான பிரச்சினைகள் வெவ்வேறானவை. பிரச்சினைகளுக்கான காரணம் வெவ்வேறானவை. அதனால் இந்த பகுதிக்கு ஏற்ற வகையில் இப்பிரச்சினைக்கான தீர்வை நாடவேண்டும். விசேடமாக யானை முகாமைத்துவ பகுதிகளை கட்டாயம் வர்த்தமானியில் வெளியிட வேண்டும். இது தொடர்பில் கடந்த வாரம் அமைச்சரவையிலும் நாம் பேசினோம். அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் சீ.பீ ரத்னாயக்க ஆகியோர் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இம்மாத இறுதிக்குள் இந்த முகாமைத்துவப் பகுதி வர்த்தமானியில் அறிவிக்கப்படும். இதன் ஊடாக ஒரு பக்கம் எம்மால் சுற்றாடலை பாதுகாக்க முடியும். மக்களையும் யானைகளையும் பாதுகாக்க முடியும்.”