fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போயிங் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 14:21

போயிங் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்

போயிங் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை, பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான தயாரிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போயிங் 37 மெக்ஸ் ரக விமானங்கள் பல கடந்த காலங்களில் விபத்துக்குள்ளானது. அதனையடுத்து விமான தயாரிப்பு வீழ்ச்சிகண்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக விமான போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதுவும் விமான தயாரிப்பு பணிகளை பாதிப்படையச்செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு போயிங் நிறுவனம் புதிதாக 380 விமானங்களை தயாரித்துள்ள நிலையில், கடந்த வருடம் அது 157 வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 14:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க