fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 12:28

கொரோனா தொற்று நீடித்த போதிலும் தமது வங்கியின் செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கியின் முகாமைத்துவம் தெரிவிக்கின்றது. இலங்கை வங்கி நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே மற்றும் முகாமையாளர் டீ.பீ.கே குணசேகர உள்ளிட்ட வங்கியின் ஒரு சில உயரதிகாரிகளின் பங்கேற்றலுடன் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. சௌபாக்கிய கொவிட் 19 கடன் திட்டத்தின் கீழ் கொரோனா காரணமாக நிதி நெருக்கடிகளுக்கு உட்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இலங்கை வங்கியின் மூலம் 39 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை வங்கியின் திவிஉதான கடன் திட்டத்தின் கீழ் 128 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ் ஊடக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் தற்போதைய சொத்துக்களின் பெறுமதி 17 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33