புற்றுநோயை ஒழிக்கும் கதிர்வீச்சு ஒளடதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கத் திட்டம்
Related Articles
புற்றுநோய் தடுப்புக்கான கதிர்வீச்சு ஒளடதங்களை நாட்டிலேயே தயாரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஒளிப்பரப்பாகிய ஹத்வனி பய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
இந்த கதிர்வீச்சு ஒளடதத்தை உள்நாட்டில் தயாரிப்பதன் மூலம் பெரும்பாலான புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான சந்தர்ப்பம் உருவாகுமென வைத்திய நிபுணர் ஜயந்த பலவர்தண இதன்போது தெரிவித்தார்.