தேசிய ஐக்கிய முன்னனியின் செயலாளர் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க நியாயத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே அசாத்சாலி தெரிவித்த கூற்றுக்காக அவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். இதனால் அசாத்சாலியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.