fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலத்த மழையை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2021 12:19

வட மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழையை தொடர்ந்து இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளையும் திறந்து விட மாகாண நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அச்சுறுத்தல் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கௌடுல்ல நீர்;த்தேக்கத்தினதும் ஆறு வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சோமாவதி வீதி உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தினதும் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் இதனால் கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. புத்தளத்திலிருந்து எலுவன் குளம் ஊடாக மன்னார் வரையான வீதியில் வில்பத்துவை காண பிரவேசமும் தற்போது தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எலுவன் குளம் சப்பாத்து பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடற்படை சோதனைச் சாவடியையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையையடுத்து பல குளங்கள் பெருக்கெடுக்கும் நிலையில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு நவகிரி வாவியில் இரண்டு வான் கதவுகளைத் திறக்க அதன் பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2021 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க