fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2021 17:18

அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த 7 ம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களையும் மானஸ் லபுசெய்ன் 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்திய அணி தமது முதல் இனிங்சில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

சப்மன் கில் மற்றும் ச்செடீஸ்வர் புஜாரா ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். பெட்கமீஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இனிங்சில் 6 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. கமேறூன் கீறின் 84 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 81 ஓட்டங்களையும் லபுசெய்ன் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அறிமுக போட்டியில் விளையாடும் நவ்தீப் சைனி முதல் இனிங்சில் 2 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்சில் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார். பின்னர் 407 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இறுதி நாளான இன்று 5 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ரிஷப் பேண்ட் 3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். ச்சடீஸ்வர் புஜாரா மற்றும் ரோஹேஸ் சர்மா ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார். 4 போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் எதிர்வரும் 15 ம் திகதி ப்ரீஸ் பேர்ணில் ஆரம்பமாகவுள்ள 4 வது டெஸ்ட் போட்டி தொடர் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2021 17:18

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க