Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை
Related Articles
அடுத்த வாரமும் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். வர்த்தன அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
“அடுத்த வாரம் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தினை ஒரு கிலோ 75 ரூபாவிற்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள உருளை கிழங்குஒரு கிலோ 130 ரூபாவுக்கும் ஒரு கிலோ பச்சையரிசி 93 ரூபாவிற்கும், நாடு ஒரு கிலோ 96 ரூபாவுக்கும், தொடர்ச்சியாக விற்பனை செய்யும் கொள்கையை நாம் நடைமுறைப்படுத்துவோம். அதற்கு அடுதத்தப்படியாக தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக இலங்கையில் பயிரிடப்படுகின்ற சோயாவினால் தயாரிக்கப்படும் சோயா எண்ணெயை பயன்படுத்த பழகினால் இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெயின் அளவை குறைத்துக் கொள்ள முடியும். சோயா உற்பத்தியாளர்களோடு நாம் கலந்துரையாடி சந்தையில் தற்போது காணப்படும் விலையிலும் குறைந்த விலையில் அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கமுடியும். அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகின்ற ஆடைகளை கழுவுவதற் கான சவர்க்காரம் முகம் கழுவ பயன்படுத்தப்படும் வாசனை சவர்க்காரம் இவற்றை அரசாங்கத்தின் பிசிசி நிறுவனத்தின் ஊடாக குறைந்த விலையில் தரமான சவர்க்காரங்களை வீடுகளுக்கே வழங்க திட்டமிட்டுள்ளோம்.”