யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர் எஸ். ஸ்ரீ சற்குணராஜாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் நினைவுத்த}பி அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அதனை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உபவேந்தர் வழங்கிய உத்தரவாதத்தையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் உபவேந்தருடன் இணைந்து, பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் நினைவுத்தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாடடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு.. நினைவுத்தூபிக்கு மீண்டும் அடிக்கல்..
படிக்க 0 நிமிடங்கள்