நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் கொவிட் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா தொற்று..
படிக்க 0 நிமிடங்கள்