கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 195 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து 68 பேரும், ஜப்பானிலிருந்து 50 பேரும், கட்டாரிலிருந்து 45 பேரும், மாலைதீவிலிருந்து 24 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8 பேரும் நாடு திரும்பியவர்களில் உள்ளடங்குகின்றனர். இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேலும் 268 பேர் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.