நேற்றைய தினம் 532 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 231 பேர் பேலியகொடை கொத்தணியுடனும், 39 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்களென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 39 ஆயிரத்து 661 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் 6 ஆயிரத்து 900 பேர் சிகிச்சைப்பெற்று வருவகின்றனர். நேற்றைய தினம் வரை 222 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 532 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
படிக்க 0 நிமிடங்கள்