fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய வெளியுறவு அமைச்சர் பல்துறை அரசியல் தலைவர்களை சந்தித்து இந்திய புறப்பட்டார்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2021 19:49

இந்திய வெளியுறவு அமைச்சர் பல்துறை அரசியல் தலைவர்களை சந்தித்து இந்திய புறப்பட்டார்..

3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் நாட்டின் பல்துறை அரசியல் தலைவர்களை சந்தித்ததன் பின்னர் இந்தியா பயணமானார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் எதிர்க்கடசி தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று சந்தித்தார். இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் நினைவுகூர்ந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த்hர்.

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும். இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியி;ன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2021 19:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க