பூனைகளுக்கான உணவு என்ற போர்வையில் போதை பொருள் கடத்தல்
Related Articles
பூனைகளுக்கான உணவு என்ற போர்வையில் பெல்ஜியத்திலிருந்து சில பொதிகள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
அவை பூனைகளுக்கான உணவா, அல்லது போதைப்பொருள் வில்லைகளா என்பதை எமது சுங்க அதிகாரிகள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து துல்லியமாக கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஒரு சில தபால் பொதிகளில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இலங்கை சுங்க தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 18 ஆயிரம் போதைப்பொருள் வில்லைகள் அந்த பொதிகளில் இருப்பதை அதிகாரிகள் கண்டுகொண்டனர். 9 கிலோ கிராம் எடைகொண்ட இந்த 18 ஆயிரம் போதைப்பொருள் வில்லைகளின் பெறுமதி சுமார் 13 கோடி ரூபா என சுங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர். பூனைகளின் உணவு என்ற போர்வையில் பக்கெட்டுக்களில் அடைக்கப்ப்ட்ட நிலையில் பெல்;ஜியத்திலிருந்து இந்த போதைப்பொருள் வில்லைகள் எடுத்து வரப்பட்டுள்ளதகா தெரியவருகின்றது.