fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக தொடர்ந்தும் சட்டநடவடிக்கை..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2021 14:59

முகக்கவசம் அணியாத நபர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். நேற்றைய தினம் 523 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் 252 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அத்துடன் 271 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளன.

இதனிடையே நேற்றுமுன்தினம் 550 பேருக்கு ரெபிட் என்டிஜன் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் நபர்களை கண்டறியும் வகையில் மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுமென பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2021 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க