கடலையும் மாசுபடுத்தியது கொரோனா..
Related Articles
வருடம் ஒன்றுக்கு ஐயாயிரம் தொன் அளவிலான முகக்கவசங்கள் கடலில் வீசப்படுவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து முகக் கவசம் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான முகக் கவசங்கள் நாள்தோறும் ஒதுக்கப்படுகின்றன. இதன்ஊடாக சுற்றாடலில் சேறும் உக்காத கழிவுகளின் தொகை பல மடங்காக அதிகரிப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் தொன் கணக்கான முகக் கவசங்கள் கடலில் வீசப்படுவது ஆபத்தான விடயம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் ஊடாக மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதேவேளை கடல்வள அழிவு ஏற்படுவதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டேர்னி பிரதீப் குமார தெரிவித்தார். அகற்றப்படும் முகக் கவசங்களை எரிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் இணைந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.