fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிரான தேசிய தினம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2021 10:38

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித விதான பதிரன தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இவ்வாறான தினமொன்றை அமுல்படுத்துவது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆராயப்பட்டது. இதற்கமைய ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 4ம் திகதி சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 13 ஆவது தடவையாகவும் அனுஷ்டிக்கப்படும் குறித்த தினத்தை முன்னிட்டு விசேட ஸ்டிக்கர் விநியோக நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் அதிகார சபையின் பிரதான காரியாலயம் அமைந்துள்ள தலவத்துகொட மற்றும் மாதிவல ஆகிய பகுதிகளில் ஸ்டிக்கர் விநியோக திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று காலை 10 மணிமுதல், ஒரு மணித்தியாலத்திற்கு ஸ்டிக்கர் விநியோக பணிகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிரதிபலனாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 8 ஆயிரத்து 558 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. எனினும் 2020ம் ஆண்டில் 7 ஆயிரத்து 862 முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றன. எதிர்வரும் காலங்களிலும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை குறைவடையுமென்ற நம்பிக்கையுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித விதான பதிரன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2021 10:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க