fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2021 12:42

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் கடந்த வருடம் நவம்பர் 29ம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய நீதியமைச்சரால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதன் தலைவராக முன்னாள் மேல் நீதிமன்ற நீதவான் குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான குழுவின் அறிக்கை நிறைவுசெய்யப்பட்டு கடந்த 30ம் திகதி நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2021 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க