6 யானைத் தந்தங்களுடன் மாத்தறை பகுதியில் வைத்து ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தங்காலை முகாம் அதிகாரிகள் மாத்தறை கரையோர வீதியில் யானைத் தந்ததத்துடன் இச் சந்தேக நபரை கைதுசெய்தனர். 6 யானைத் தந்தங்களையும் இவர் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு குறித்த யானைத் தந்தங்களை வழங்கியதாக கைதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யானைத் தந்தங்களையும் சந்தேப நபரையும் மேலதிக விசாரணைகளுக்காக தங்கல்ல கப்புஹேன்வல வனஜீவராசிகள் காரியலாயத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.