கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 397 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். சென்னையிலிருந்து 283 பேரும், டுபாயிலிருந்து 48 பேரும், கட்டாரிலிருந்து 27 பேரும் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.