பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்
Related Articles
மஹவ நகரில், பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏனைய அதிகாரிகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலரிடம் பொலிஸ் சார்ஜெண்;ட் விசாரணைகள் முன்னெடுத்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் அவர்; மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் சார்ஜெண்ட் மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நிகவரெட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மஹவ பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.