fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு முழுவதும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி நடவடிக்கை தொடர்ந்தும்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2020 12:31

நாடு முழுவதும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி நடவடிக்கை தொடர்ந்தும்..

நாடு முழுவதும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

ஹிங்குரக்கொட பிரதேச செயலக பிரிவில் கிரித்தலையிலிருந்து நூககஹ தமண வரையான வீதியும் இதன் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது. 40 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இவ்வீதி 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. ஹிங்குராக்;கொட பிரதேச சபை தலைவர் டி.ஆர்.உடவத்த தலைமையில் இதன் ஆரம்ப பணிகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு கோளரளைப்பற்று கிண்ணையடி பகுதி வீதி புனரமைப்பு பணிகள்;; ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் இவ்;வீதி நிர்மாணிக்கப்படுகிறது. நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண கண்காணிப்பாளர் கலைவாணி வன்னிய சிங்கம் உள்ளிட்டோர்;; இணைந்திருந்தனர்.

வெலிமலை திவுறும்;கம குடியிருப்பில் 3 குறுக்கு வீதிகள் கொங்கீரீட்;; இட்டு புனரமைக்கப்படுகின்றன. பல கிராமமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் வெலிமடை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் இந்திக்க சம்பத் தலைமையில் ஆரம்பமானது. இதற்கென 15 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2020 12:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க