இலங்கையில் வயது கூடிய மூதாட்டி தன் வாழ்வுக்கு விடைகொடுத்தார்..
Related Articles
இலங்கையின் வயது கூடிய மூதாட்டி வேலுபாப்பானி காலாமனார். களுத்துறை நேஹின்ன குளோடன் பெருந்தோட்ட பகுதியிலேயே அவர் வசித்து வந்தார். .
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 1903 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த அவருக்கு உயிரிழக்கும் போது 117 வயதாகும். அவர் இருபிள்ளைகளின் தயாவார். இலங்கையில் வயது கூடிய பெண் என அவரை அடையாளப்படுத்தி மூதியோருக்கான தேசிய சபை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச முதியோர் தினத்தில் சான்றிதழ் வழங்கியது.
தொடங்கொட பிரதேச செயலாளர் தர்ஷனி ரணசிங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் தனது வாழ்நாளின் இறுதி காலப்பகுதி வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக குறிப்பிட்டார். களுத்துறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தன்னுடைய தனிப்பட்ட நிதியொதுக்கீட்டில் வீடொன்றை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.