fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2020 11:20

கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

அதிக மழை காரணமாக கொள்ளுப்பிட்டியில் கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையிலுள்ள குறித்த வேலைத்தளத்தில் வாகனம் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டு வந்த இடத்தில் 12 அடி உயரம் நீர் நிரம்பியுள்ளது. முதல் மாடியும் இரண்டரை அடி ஆழத்தில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிர்மாணப் பணிகளில் பணியாற்றிய ஊழியர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவர் ஊவ பரணகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இங்கு பாதுகாப்பற்ற முறையில் ஊழியர்கள் பணி புரிவதாக தெரியவருகிறது. தீயணைப்பு படை வீரர்களின் 10 மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னரே உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2020 11:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க