சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்று ஆரம்பமாகிறது. சிவனொளிபாத மலை யாத்திரை காலம் அரச நிகழ்வாக இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பெல்மெடுல்ல கல்பொத்தாவில சிவனொளிபாத மலை விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்களை பக்தர்கள் வழிபடுவதற்கு நேற்று முதல் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சமன்தேவ சிலை ஆபரணங்கள் மற்றும் ஏனைய பூஜை பொருட்கள் நான்கு வழிகளின் ஊடாக சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று காலை பிரதிஷ்டை செய்யப்படும்.
இன்று பௌர்ணமி தினத்தோடு சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பமாகிறது. அடுத்த வருடம் வெசக் போய தினத்துடன் யாத்திரை காலம் நிறைவுக்கு வரும். இதேவேளை சமன்தேவ உருவச்சிலை தேவ ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விசேட அறையிலிருந்து வெளியில் கொண்டுவரப்படும் நிகழ்வில் சிவனொளிபாத மலை விகாரை தலைமை பிக்கு வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் ஆளுநர்களான டிகிரி கொப்பேகடுவ லலித் யு கமகே ஆகியோரும் அமைச்சர் சரத் வீரசேகரவும் இணைந்திருந்தனர்.