ஒருசில அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் தற்போதைய மாகாண சபை முறையை தமது கட்சி அங்கீகரிக்காது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாஹர காரியவசம் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“மாகாண சபை தேர்தல் தொடர்பாக எமது கட்சியின் நிலைப்பாடு இன்றும் இந்த நாட்டில் மாகாண சபை முறை காணப்படுகின்றது. மாகாண சபை முறை இல்லையென எவராவது கூறினால் அது பொய்யாகும். மக்கள் பிரதிநிதிகள் ஊடாக செயற்பட வேண்டிய மாகாண சபை இன்று ஆளுநருடன் ஒருசில அதிகாரிகளை கொண்டு அவை செயற்படுத்தப்படுகின்றன. அது ஜனநாயகத்திற்கு எதிரானது. மாகாண சபைகளை வைத்திருப்பதா இல்லையா என்பது வேறு விடயம். எனினும் இப்போதைக்கு மக்கள் பிரதிநிதிகள் நியிமிக்கப்பட வேண்டும். வேண்டுமென்ற நிலைப்பாட்டில் கட்சியென்ற வகையில் நாம் இருக்கின்றோம்.”
புதிய ஆண்டின் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக பா.உ பேராசிரியர் சரித்த ஹேரத் கருத்து வெளியிட்டார்.
“பொருளாதார அபிவிருத்தி மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றைய விடயம் அரசியல் மறுசீரமைப்பு. இந்த மூன்று விடயங்கள் ஊடாக எமது வேலைத்திட்டங்களை கட்சி முக்கியஸ்தர்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம். இது சமூக உடன்படிக்கையாக முன்வைக்கப்பட்டது. அதன் பொருளாதார வேலைத்திட்டம் உரிய திட்டமிடல்களுக்கு ஏற்ப ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளோம்.”