fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூட்டில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 12:19

வெயங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலின்போது 37 வயதான சந்தேக நபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 19ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபரை இன்று காலை வெயங்கொட பகுதிக்கு அழைத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர்மீது ஏற்கனவே 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகள் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க