fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 11:55

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பமாகிறது. சிவனொளிபாத மலை யாத்திரை காலம் அரச நிகழ்வாக இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பெல்மெடுல்ல கல்பொத்தாவில சிவனொளிபாத மலை விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்களை பக்தர்கள் வழிபடுவதற்கு நேற்று மாலை முதல் இன்று காலை வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சமன்தேவ சிலை ஆபரணங்கள் மற்றும் ஏனைய பூஜை பொருட்கள் நான்கு வழிகளின் ஊடாக சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை காலை பிரதிஷ்டை செய்யப்படும்.

நாளைய பௌர்ணமி தினத்தோடு சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பமாகிறது. அடுத்த வருடம் வெசக் போய தினத்துடன் யாத்திரை காலம் நிறைவுக்கு வரும். இதேவேளை சமன்தேவ உருவச்சிலை தேவ ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விசேட அறையிலிருந்து வெளியில் கொண்டுவரப்படும் நிகழ்வில் சிவனொளிபாத மலை விகாரை தலைமை பிக்கு வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர்; ஆளுநர்களான டிகிரி கொப்பேகடுவ லலித் யு கமகே ஆகியோரும் அமைச்சர் சரத் வீரசேகரவும் இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க