fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சப்புகஸ்கந்தை பகுதியில் தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொலிஸ் வலையில்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 11:13

சப்புகஸ்கந்தை பகுதியில் தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொலிஸ் வலையில்..

சப்புகஸ்கந்தை பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த மாகொல வடக்கு பகுதியில் அவரது காதலியின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 22 வயதான குறித்த இளைஞர் அண்மையில் மஹர சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ,முடிவுகள் வரும் வரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இறுதியில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சுகாதாரப் பிரிவினர் அவரது வீட்டுக்குசென்றிருந்தனர்.

எனினும் குறித்த நபர் தப்பிச்சென்ற நிலையில் , அவரை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர். பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவருக்கெதிராகவும், அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க