சுற்றுலாப் பயணிகளுக்கென சர்வதேச விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுடன் கூடிய முதலாவது குழுவினர் இன்றைய தினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர். யுக்ரேனின் க்யூ நகரிலிருந்து சுற்றுலாக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.15 மணியளவில் ஸ்கையப் என்ற விமனாத்தினூடாக 185 யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள் மத்தல விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கையர்களுடன் நெருங்கிப் பழக இடமளிக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.