இம்முறை நத்தார் பண்டிகையின் போது விசேட தேவ ஆராதனைகளை நடாத்தும் நாட்டின் பிரதான கத்தோலிங்க ஆலங்களில் உள்ள 15 ஆயர்களுக்கு பத்திக் ஆடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. பத்திக் தயாரிப்புக்களை ஊக்குவிக்கும் வகையில் இக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.
பத்திக் கைத்தெறி மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் ராஜாங்க அமைச்சு பத்திக் உள்ளிட்ட உள்நாட்டு ஆடைத் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வேலைத்த்pட்டத்தின் மற்றொரு நடவடிக்கையாக நத்தார் பண்டிகையின் போது விசேட ஆராதனைகளை நடத்துகின்ற பிரதான ஆயர்கள் 15 பேருக்கு பத்திக் தயாரிப்பினாலான ஆடைகள் வழங்கப்பட்டன.
இதன் கீழ் வடமேல் மாகாண பிரதம ஆயர் வணக்கத்திற்குரிய ஹெரல் என்டனி அருட்தந்தையிடம் குருநாகல் ஆயர் இல்லத்தில் வைத்து இவை வழங்கப்பட்டன. ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.