fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2020 12:06

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் வெள்ள அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையைத் தொடர்ந்து சிறிய குளங்கள் பெருக்கெடுத்துள்ளதால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பல வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அத்துடன் சோமாவத்தி புனித பூமிக்கு செல்லும் வீதி 3 அடிக்கு நீரில் மூழ்கியுள்ளதனால் அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளத. சோமாவதி புனித பிரதேசத்தில் 6 கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கொழும்பு மட்டக்களப்பு வீதியின் கொட்டலிய பகுதியும் நீரில் மூழ்கியுள்ளதனால் இலகுவாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்துவருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பலத்த மழையைத் தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இன்று காலை 8.30 வரையான 48 மணித்தியாலங்களுக்குள் இம்மாவட்டத்தில் 341 மில்லிமீற்றர் பலத்த மழை பெய்துள்ளதாக மாவட்ட காலநிலை கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவிக்கிறது. காத்தான்குடி, நாவற்குடா, ஆரயம்பதி, வெல்லாவளி, கொக்கெட்டிச்சோலை, கிரான் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை தொடர்ந்தும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2020 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க