fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொரளை வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2020 12:34

பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறே கொலைக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை, சரணபால மாவத்தையை சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இ

தேவேளை, ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்;கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2020 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க