fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நுவரெலியாவில் விசேட சுற்றுலா வலயத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2020 15:34

நுவரெலியாவில் விசேட சுற்றுலா வலயத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நுவரெலியாவிலிருந்து, கித்துல்கல, கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளை கேந்திர நிலையங்களாக வைத்து சுற்றுலா வலயம் மேம்படுத்தப்படும். நுவரெலியாவிலிருந்து, நானுஓயாவுக்கு கேபள் கார் சேவையும் ஆரம்பிக்கப்படும். கொட்டகலை ஈரவலய பூங்காவை அபிவிருத்தி செய்ய 270 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

நுவரெலிய குதிரை பந்தய மைதானத்தை 700 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கமைய அபிவிருத்தி மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2020 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க