fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு ரெபிட் பரிசோதனை.. தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு முன்னெடுக்க தீர்மானம்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2020 15:34

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை எழுமாறாக ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்றைய தினம் 400க்கும் மேற்பட்டோர் எழுமாறான ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

மேல் மாகாணத்தின் 4 எல்லைப்பகுதிகளில் நடமாடும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணபபடுவோர் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அவர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்களெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரெபிட் என்டிஜன் பரிசோதனை என்பது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் செயற்பாடு அல்ல. மேல் மாகாணத்திற்கு வெளியே வாழும் மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோர் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய நபர்கள் சிலரால் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் நிலை ஏற்பட்டது. குறிப்பாக மலையகத்தில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. புதிய உப கொத்தணிகளும் உருவாகின. இவ்வாறான நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தின்போதும் குறித்த நிலை உருவாவதை தவிர்ப்பதே பிரதான நோக்கமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2020 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க