நாரஹென்பிட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊழியர்கள் சிலர் இன்று முற்பகல் தமது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டதால் இத்திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைதந்திருந்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஊழியர்கள் சிலர் இவ்வாறு தமது கடமைகளிலிருந்து விலகியிருந்தனர். இதன் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு முன்பாக பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த்ப்பட்டனர். அதிக தூர பிரதேசங்களிலிருந்தும் இங்கு சேவையினை பெற்றுக்கொள்ள அதிகளவான மக்க்ள் வருகைதந்திருந்த நிலையில் அவர்கள் பெரும் அசௌகரியங்;களுக்கு முகம் கொடுத்தனர்.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கென உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் குறித்த வளாகத்திற்கு வருகைதந்தனர். சுமார்; 4 மணித்தியாலங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊழியர்கள் தமது கடமைகளை மீள ஆரம்பித்தனர்.