தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக சந்தைக்கு தேவையான பொதிசெய்யப்;பட்ட உணவு தயாரிப்புகளுக்காக கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் திறக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் எந்தவிதத்திலும் மாடறுப்பு இடம்பெறவில்லையென அதன் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சாலை கடந்த 11 ம் திகதி கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்திற்குள் திறக்கப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள்; சிலர் இதுதொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டனர். பெறுமதி சேர்க்கப்பட்ட மாமிச மற்றும் மாமிச மல்லாத உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 400 க்கும் அதிகமான தயாரிப்புக்களை குறித்த தொழிற்சாலையில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இத்தொழிற்சாலையில் இந்நாட்டின் பாரிய மாடறுப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதுதொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
எவ்வாறெனினும் கில்ஸ் இன்டர்னெஷனல் புதிய உணவு தயாரிப்பு தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரியிடம் நாம் இதுதொடர்பில் வினவினோம். எமக்கு கருத்து தெரிவித்த அவர் இந்நிறுவனத்தில் கோழி இறைச்சி தேசிய விநியோகஸ்த்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் இலங்கைக்குள் விநியோகிக்கப்படாத மூலப்பொருட்கள் மற்றும் மாமிசங்களை உயர் தரம் கொண்ட நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்வதாகவும் குறிப்பிட்டார். இதில் அதிகளவானவற்றை மீள் ஏற்றுமதி செய்வதே தமது நிறுவனத்தின் நோக்கமெனவும் அதன் நிர்வாகம் தெரிவிக்கிறது.