உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆவணங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது ஆலோசனைக்காக மாத்திரமே. அது இவ்விடயம் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு இல்லையென அரச சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது குறிப்பிட்டார்.
தான் சட்டத்தரணியாக கேள்விகளை தொடுத்த போது சாட்சியாளராக இருந்த சட்ட மாஅதிபரின் இணைப்பாளர் பதில் அளித்த விதம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டே ஜனாதிபதி சட்டதரணி இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன் சட்ட மாஅதிபரின் இணைப்பாளர் சாட்சியமளித்த விதம் குறித்து கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி எச்சரிக்கையை கூட விடுத்தது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்ட மாஅதிபரின் இணைப்பாளர் அரச சட்டதரணி நிஷாரா ஜயரட்ன 2019ஆம் ஜீன் 19ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தார். சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பாக இவர் வெளியிட்ட ஊடக அறிவித்தல் குறித்து சாட்சியங்களை பெறுவதற்காகவே இவர் அழைக்கப்பட்டிருந்தார்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் காணப்பட்ட சஹ்ரான் ஹாஷிம் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பாக பயங்கரவாத விசாரணை பிரிவுடன் தொடர்புப்பட்ட ஆவணங்கள் குறித்து சங்கைக்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே குறித்த ஊடக அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதன் போது குறித்த ஊடக அறிவித்தல் தொடர்பாக சட்ட மாஅதிபரின் இணைப்பாளர் இவ்வாறு சாட்சியமளித்தார். சங்கைக்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் எமது திணைக்களத்திற்கு அருகாமையில் வந்து தெரிவித்த பொய்யான உண்மைக்கு புறம்பான அறிக்கை தொடர்பாகவே 2019 ஜீன் பத்தாம் திகதி இவ்வூடக அறிவித்தலை நான் வெளியிட்டேன். சஹ்ரான் ஹாஷிம் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பாக 2018 ஜீலை 7ஆம் திகதி 30 பக்கங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை பயங்கரவாத விசாரணை பிரிவு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு வழங்கியதாக தேரர் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்த முழுமையான ஆவணம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரே சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தது. அதாவது 2019 மே ஆறாம் திகதி ஆகும்.
இது தொடர்பாக சட்ட மாஅதிபர் அப்போதிருந்த பதில் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தை அடிப்படையாக வைத்தே சட்ட மாஅதிபரின் வாய்மூல ஆலோசனைக்கு அமைய இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டேன். ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி பயங்கரவாத விசாரணை பிரிவு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிய கேள்விக்குரிய ஆவணம் குறித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் தவறொன்று புறக்கணிக்கப்படவில்லையென குறிப்பிடப்பட்டிருந்ததா என கேட்டப்போது, சட்டதரணி நிஷாரா ஜயரட்ன, அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது நீதிபதி அவர்களே! சட்ட மாஅதிபர் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு இக்கடிதத்தை அனுப்பிய சந்தர்ப்பத்தில் சட்ட மாஅதிபர் திணைக்களம் இச்சம்பவத்துடன் தொடர்புப்பட்ட எவ்வித உள் விவகார விசாரணைகளையும் ஆரம்பித்திருக்கவில்லை. சட்ட மாஅதிபர் திணைக்களம் உரிய முறையில் செயற்பட்டதா இல்லையா என்பதை தெளிவுப்படுத்துவதற்காக அல்ல இவ்வூடக அறிவித்தல் விடுக்கப்பட்டது. சங்கைக்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்த கூற்றுக்கு பதில்; அளிக்கும் வகையிலேயே இது வெளியிடப்பட்டது என தெரிவித்தார்.
பின்னர் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி 2020 நவம்பர் 27 ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உங்கள் திணைக்களம் அரச சேவை ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதற்கும் உங்களது ஊடக அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றதே என விணவினார்.
இதற்கு பதிலளித்த நிசாரா ஜயரத்ன சட்டமா அதிபர் திணைக்களம் மூவரடங்கிய குழுவொன்றை அமைத்து உள்ளக விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு முன்னரே குறித்த ஊடக அறிக்கையை வெளியிட்டது. அதன் பின்னரே குழு விசாரணைகளை முன்னெடுத்து, பரிந்துரைகளை முன்வைத்தது என பதிலளித்தார்.
அதன் பின்னர் பிரச்சினைக்குரிய ஆவணங்கள் தொடர்பில் செயல்பட்டு சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ தனது குறுக்கு கேள்வியை ஆரம்பித்தார்.
நீங்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவா விசாரணை பிரிவு ஊடாக ஆலோசனை வழங்கும் அளவுக்கு தகவல் முன்வைக்கப்படவில்லை. என குறிப்பிட்டது சட்டமா அதிபரின் நிலைப்பாடு தானே என விணவினார்.
இதற்கு பதிலளித்த நிசாரா ஜயரத்ன 2019 ஜூன் 18 ஆம் திகதி சட்டமா அதிபர் பதில் ;பொலிஸ்; மா அதிபருக்கு ஆலோசனை கடிதம் ஒன்றையே அனுப்பினார். அந்த கடிதத்தை அடிப்படையாக வைத்தே நான் குறித்த் ஊடக அறிவிப்;பை வெளியிட்டேன். இந்த அதிகாரிகள் இருவரும் பிழை செய்யவில்லையென்பதை என்வாயால் கூறுவதை எதிpர்பார்த்தே சட்;டத்தரணி இவ்வாறான கேள்விகளை கேட்கின்றார். இதனை நான் ஏற்றுக்; கொள்ள் மாட்டேன் என நிசார ஜயரத்ன தெரிவித்தார்.
பின்னர் கேள்வி எழுப்பிய சட்டத்தரணி உங்கள் ஒழுக்க்hற்று அதிகாரி யார் என கேட்டார்.
அதற்கு பதில் வழங்கிய அரச சட்டவாதி நிசாரா ஜயரத்ன நான்; ஊடக அறிவிப்பு தொடர்பில் பதில் வழங்கவே இங்கு வருகை தந்தேன். கனம் நீதிபதி அவர்களே இந்த சட்டத்தரணி கேட்கின்ற கேள்விகள் எல்லாம் ஆணைக்குழுவினால் தேடி அறியப்பட வேண்டிய விடயங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ள எண்ணுவதாக தோனுகின்றது. அதனால் நான் இவற்றிற்கு பதிலளிக்க வேண்டுமா என வினவினார்.
பின்னர் கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி இந்த குண்டு தாக்குதல் நடைபெறும் போது அரச அதிகாரிகள் எவராவது தமது கடமையை சரிவர செய்யவில்லையா என்பதை கண்டறிவதே ஆணைக்குழுவின் நோக்கமாகும். பயங்கரவாத விசாரணை பிரிவின் ஆவணங்கள் தொடர்பில் உங்களது திணைக்களத்தின் எந்தவொரு அதிகாரியும் குற்றமிழைக்கவில்லையென முதலில் உங்களது திணைக்களமே கடிதம் ஒன்றையும் ஊடக அறிவிப்பொன்றையும் வெளியிட்டது. அதன் பின்னர் உங்களது சட்டமா அதிபர் திணைக்களம் இரு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றது. அதனால் நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது கட்டாயமாகும். அதேபோல் நான் உங்களை எச்சரிக்கின்றேன். நீங்கள் இந்த ஆணைக்குழுவின் சாட்சியாளர் மாத்திரமே ஆகவே சட்டத்தரணிகள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் தர்க்கம் செய்ய முடியாது. உங்களுக்கு தேவையெனில் உங்கள் சார்பில் சட்டத்தரணி பிரதிநிதியொருவரை வரவழைத்துக் கொள்ள முடியுமென உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் அரச சட்டவாதி நிசாரா ஜயரத்னவிடம் அறிவித்தார்.