வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
நாட்டில் வட கிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. இதன் மூலம் நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது. விசேடமாக வடக்கு வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதற்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையிலோ அல்லது இரவு வேளையிலோ மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இதற்கு மேலதிகமாக சப்ரமுவ மாகாணத்திலும் களுத்துறை , காலி ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றரை தாண்டிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.