நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா பகுதியில் இருந்து பொக்கோஹாரம் பய்ங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளால் 300க்கும் அதிக மாணவர்கள் கடத்தப்பட்டனர். மீட்பு பணிகளின் போது இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட மாணவர்கள் ஜம்பாரா வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்குலக கல்விக்கு எதிர்ப்பு எதிவித்து மாணவர்களை கடத்தியதாக பொக்கோஹாரம் அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேக்கோ தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகயில் நைஜீரிய அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 2014ம் ஆண்டு முதல் பொக்கோஹாரம் அமைப்பு பாடசாலை மாணவர்களை கடத்தும் செயற்பாட்டில் ஈடுப்பட்டுவருதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.