படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கிருமிநாசினியை தனியார் தோட்ட தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வனாத்தவில்லுவ மங்கலபுர பகுதியிலேயே இக்கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சந்தையை இலக்கு வைத்து வனாத்தவில்லுவ மங்கலபுர பகுதியில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பயிர்ச் செய்கைக்கும் படைப்புழுவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் சந்தையில் உள்ள பல்வேறுப்பட்ட கிருமிநாசினிகளை இதற்கு பயன்படுத்திய போதிலும் எவ்வித பயனும் கிட்டவில்லை. இதற்கு அமைய இங்கு சேவையாற்றுகின்றவர்கள் தேசிய ரீதியிலான மருந்தொன்றை பரிசீலனை செய்துள்ளனர். ஆயிரம் லீட்டர் நீருடன் 3 லீட்டர் வேப்பிலை எண்ணெய் 3 கிலோ கிராம் மிளகாய் தூள் மற்றும் 3 கிலோ கிராம் உப்பு போன்றனவற்றை கலந்து பெறப்பட்ட திரவத்தை இப்பயிர்ச் செய்கையில் தெளித்துள்ளனர். இதன்மூலம் ஒரு நிமிடத்தில் படைப்புழுக்கள் விழுந்து இறந்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய தேசிய கிருமிநாசினி காரணமாக தற்போது படைப்புழுவினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் இன்றி பயிர்ச் செய்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.