தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016, 2018ஆம் ஆண்டுகளில் பாடநெறிகளை தொடர்ந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக தகவல்கள் திரட்டப்படுவதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது. இச்செயற்பாடானது ஒன்லைன் மூலமே இடம்பெறுகின்றது. அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து குறித்த தகவல்களை உள்ளடக்குவதன் மூலம் இதற்கென விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் 20ஆம் திகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இறுதி தினமாகும்.