fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று காலை வரை நாட்டில் 643 புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2020 12:52

மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியதை அடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் வெலிசறை தொளுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொவிட் 19 தொற்றாளர் தப்பியோடியுள்ளார்.

இன்று காலை 3 கொவிட் மரணங்கள் பதிவாகின. கொழும்பு 14 ஐ வசிப்பிடமாக கொண்ட 60 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 14 ம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 12 ம் திகதி கொழும்பு 15 ஐ வசிப்பிடமாக கொண்ட 85 வயதுடைய ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தார். அத்துடன் மட்டக்குழியை வசிப்பிடமாக கொண்ட 84 வயதுடைய நபர் கடந்த 12 ம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை வரை நாட்டில் 643 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 19 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள். அத்துடன் இரு வெளிநாட்;டவர்களும் அடங்குகின்றனர். எஞ்சிய 620 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் கூடுதலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவ் எண்ணிக்கை 309 ஆகும். க்ரேண்ட்பாசிலிருந்து 69 பேரும் மட்டக்குழியிலிருந்து 52 பேரும் மருதானையிலிருந்து 25 பேரும் பொரள்ளையிலிருந்து 24 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளிலிருந்து எஞ்சியோர் இனங்காணப்பட்;டனர்.

இதற்கு மேலதிமாக களுத்துறை மாவட்டத்தின் 119 தொற்றாளர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 104 தொற்றாளர்களும் பதிவாகினர். ஏனைய 90 தொற்றாளர்களும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து பதிவாகியதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 121 ஆகும். 9097 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 24867 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2020 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க