மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகளின் இறுதி கிரியைகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று…
Related Articles
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சிறைச்சாலையின் நெரிசலை குறைப்பதற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகளின் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் விதம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. விசாரணைகள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெறவுள்ளது. இதுவரை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் 344 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் குழப்பநிலையை ஏற்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.