ஜேர்மனியிலுள்ள வைத்தியசாலைகள் கொவிட் 19 தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காணப்படுகின்ற தற்போதைய நிலைமைக்கு ஏற்ப வைத்தியசாலைகளில் போதிய வசதிகள் இல்லையென ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வேறு வைத்தியசாலைகளிலுள்ள நோயாளர்களும் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் நோயாளர்கள ;அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜேர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் ஜேர்மனியில் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டத்தை தீவிரப்படுத்தவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.