கொரோனா தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து கூடுதலாக இனங்காணப்படுவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
“நேற்றைய தினம் இலங்கையில் 643 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். 622 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள். இதற்கு மேலதிகமாக மேலும் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். இவர்களில் கூடுதலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டவர்கள். இவ்வெண்ணிக்கை 309 ஆகும். கொழும்பு மாவட்டத்தின் கிரேன்பாஸ் பகுதிகளிலிருந்து 69 பேரும் மட்டக்குழியிலிருந்து 72 பேரும் மருதானையிலிருந்து 25 பேரும் பொரளையிலிருந்து 24 பேரும் இனங்காணப்பட்டனர். கம்பஹா மாவட்ட்திலிருந்து 107 பேர் இனங்காணப்பட்டதுடன் இவர்களில் 68 பேர் மஹர சிpறைச்சாலையிலிருந்து இனங்காணப்பட்டனர். ஏனையோர் வத்தளை, சீதுவ ஆகிய பகுதிகளிலிருந்தும் இனங்காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்திலிருந்து 119 பேர் இனங்காணப்பட்டதுடன் களுத்துறையிலிருந்து 39 பேரும் அட்டுலுகமயிலிருந்து 28 பேரும் பாணந்துறையை அண்மித்துள்ள பகுதியில் 41 பேரும் இனங்காணப்பட்டனர். அத்துடன் வெலிகமயிலும் அண்மையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். குருநாகலில் 8 பேர் காலியிலிருந்து 28 பேரும் கொழும்புக்கு அப்பால் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் எவ்வித மரணங்களும்பதிவாகவில்லை. நேற்றைய தினமும் பல விமானங்கள் மூலம் சுமார் 700 பேர் அபுதாபி மத்திய கிழக்கு கட்டார், போன்ற நாடுகளிலிருந்து இவர்கள் வருகை தந்துள்ளனர். இங்கிலாந்திலிருந்து 48 பேர் நாடு திரும்பியுள்ளளனர். ஜேர்மனியிலிருந்து 30 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்றைய தினமும் கட்டார், டுபாய், மாலைத்தீவு, போன்ற நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.”