முஸ்லிம்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் பிரத்தியேக சட்டங்கள் காணப்பட்ட போதிலும் இவர்கள் முதலில் நாட்டின் அரசியல் யாப்பிற்கும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டுமென சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முதற்தடவையாக சாட்சியமளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தொடர் குண்டுத்தாக்குதலுக்கு தலைமைத்துவம் வழங்கிய சஹ்ரான் ஹாசிமுடன் முதலில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து நீங்கியதாக தற்போதய சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். தனது பெயர் ராசிக் ரபீக்டீன் எனவும் ராசிக் என்பது இறைவனுக்கு சமனான பொருள் ஒன்றை வழங்குவதுடன் அடிமை என்ற பொருளை வழங்குகின்ற அப்துல் என்ற பெயரை பயன்படுத்தி தான் அப்துல் ராசிக் என தனது பெயரை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
நீங்கள் இவ்வாணைக்குழு ஆரம்பமாகுவதற்கு முன்னர் நாட்டின் அனைத்து தௌஹீத் அமைப்புக்களுக்கும் செய்தியொன்றை அனுப்பினீர்களா இவ்வாணைக்குழு அறிக்கைகள் மூலம் அந்த தௌஹீத் அமைப்புக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் இதனால் சகல அமைப்புக்களும் ஒரு கொள்கையின் கீழ் வருவோம் என கூறினீர்களா என தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு ஆம் நீதிபதி அவர்களே அனுப்பினேன். எனினும் அது பிழையான கருத்துக்களுக்காக அல்ல ஆணைக்குழுவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே அனுப்பினேன் என பதிலளதித்தார். தௌஹீத் அமைப்பானது சரியானதொரு நிலைப்பாட்டில் காணப்படுகிறது என்பதையா? நீங்கள் இதன் மூலம் கருதினீர்;கள். எனக் கேட்டபோது, தௌஹீத் அமைப்பானது எப்போதும் சரியானதே தௌஹீத் கருத்துக்;கள் நாட்டின் இறைமைக்கு தடையாக காணப்படுகிறது என்ற கருத்துக்கள் நாட்டில் காணப்படுகின்றன. அதனை சீர் செய்ய வேண்டும் என சாட்சியாளர் பதிலளித்தார்.
நீங்கள் கூறுகின்ற இச்செய்தி ஆனாது உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கும் பொருந்துகிறதா என தலைமை நீதிபதி கேட்டபோது. இல்லை, அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டவர்களுக்கு இது பொருந்துவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கே இச்செய்தி அனுப்பபட்டதென சாட்சியாளர் பதிலளதித்தார். 2017 நவம்பர் 12 ம் திகதி காத்தான்குடியிலுள்ள ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்ற சம்மேளனமானது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்த்p இலங்கையை சர்வ சமய நாடாக மாற்ற வேண்டுமென கூறினீர்களா என தலைமை நீதிபதி கேட்டபோது. இல்லை, நீங்கள் கூறுகின்ற சம்மேளனமானது காத்தான்குடியில் இடம்பெறவில்லை. கொழும்பு வைற்பார்க்கிலேயே இது இடம்பெற்றது.
இதன் போது தேர்தல் முறை மாற்றுதல், புதிய அரசியல் யாப்பின் தேவை குறித்து பேசப்பட்டது. எனினும் நீங்கள் கூறியதைப் போன்ற எதுவும் அங்கு பேசப்படவில்லை. நாங்கள் ஒரு இயக்கமாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அன்று முதல் இருந்து வருகிறோம் என அவர் பதிலளித்தார். அரச சிரேஸ்ட சட்டத்தரணி நீங்கள் இசையை விரும்புகிறீர்களா என கேட்டபோது நான் தனிப்பட்ட ரீதியில் விரும்புகிறேன்.
எனினும் இஸ்லாம் போதனைகளுக்கு அமைய இது முரணானது. நாங்கள் பாடுகிறோம் , எனினும் இசையையும் நடனங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. என பதிலளித்தார். வானொலி ஒன்றில் ஒலிபரப்பப்படுகின்ற இசையுடனான பாடல்களை கேட்பது இஸ்லாமிய போதனைகளுக்கு அமைய முரணானது எனவும் பதிலளித்தார். அவ்வாறாயின் தற்போது இலங்கையின் தேசிய கீதம் இசையுடனனே பாடப்படுகிறது, நீங்கள் கூறுவதைப்போல் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை, என தலைமை நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த போது, இல்லை, அவ்வாறு இல்லை தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
இஸ்லாமிய போதனைகள் அரச சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டுமென விதிக்கப்படுவதாயின் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் முதலில் நாட்டின் அரசியல் யாப்பிற்கு மதிக்க வேண்டும். அதற்கு பின்னர் நாட்டில் காணப்படுகின்ற சட்டத்திற்கும் அடி பணிய வேண்டும். அதற்கு பின்னரே சமய ரீதியிலான சட்டங்கள் பொருந்துகின்றதென சாட்சியாளர் பதிலளித்தார்.